Posts

Showing posts from October, 2018

குந்திதேவி கதை

Image
தத்துபுத்திரி... குந்தி போஜனிடம் செல்லமாய்வளர்ந்தது... தூர்வாசரின் மந்திரம் மகவுகாண செய்து... வீசப்பட்ட குழந்தை மிதந்து சென்றது; ஆற்றில்அல்ல அவள் கண்ணீர் துளியில்... சுயம்வரம் கண்டு பாண்டுகரம் கொண்டு அஸ்தினாபுரம் வந்தாள்... வனவாசத்தில் பாண்டு வகையாய் மாட்டிஅவன் இயலாமை கண்டு இல்லாளே குழந்தைபெற்றாள் மாண்ட பாண்டு: மாற்றுகாதலி உடன்கட்டையில்... மைந்தர் வளர தமையன் துணையில் சிறந்த வீரர்களை சிறப்பாய் உருவாக்கினாள்... போர் பாசறையில் போற்றப்படும் கர்ணன்; தன்மகன் எனகண்டாள்... குருசேத்திரம் நடந்தது. மாண்டான் கர்ணன். மடைதிறந்தாள் குந்தி; மகனேகர்ணா என்று... விடை கிடைத்தது விதி அழித்தது இருவரின் பழிபாவங்களை... 💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

கவிஞனின் திருமண விழா ஏற்பாடு

Image
வானவில்லே; வாயில் தோரணம் கட்டு.... வானதி; நட்சத்திரபூ தொடு.... கார்மேகனே; பன்னீர் தெளி.... ஆதித்தனே; அக்னியை வார்த்திடு.... வருணணே; வெஞ்சாரம் வீசு.... நளனே; நளபாகம் சமை.... கார்த்தியாயினி; தோழியாய் இரு.... இடியே; மத்தளம் வாசி.... மின்னலே; காணொளி எடு.... ஆயர்பாடிர்; ஆடி பாடுங்கள்.... அன்பே ஆனந்தமா.... அடைந்தாய்யா சந்தோஷம்.... இதுதான் நம் இல்ல திருமண விழா ஏற்பாடு.... 🌿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹☘️

நிழற்படக்கவிதை 1

Image
பனி யவள் பவனி வந்தாள்... என் மாளிகை வெள்ளை மாளிகையானது... மரங்களின் பசுமையில் வெண் சாயம் பூசினாள்... கார் போகும் தார் ரோடு... வழுக்கும் ரோடானது பனிவழுக்கும் ரோடானது... தனிமை விரும்பியின் சொர்க்கம் இங்கே... குலநடுங்க செய்யும்பனி குதுகலம் கொடுக்கட்டும்இனி... 🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

ஆண்டாள்

Image
கன்னியர் புடைசூழ; கார்குழனை காண, ஆண்டாள் வருகிறாள்.... ஆடி பாடி ஆலயம் வருகிறாள்.... என் கண்ணன் 'பாவை'கண்டான்னில்லை; பாவை கேட்டான், 'திருபாவை'கேட்டான்.... குழலில் மயக்கியவன் குரலில் மயங்கினான்.... ஆழ்வாரை கொள்ளாமல், ஆண்டாளை கொண்டான்.... சூடிக் கொடுத்தவளை சூடிக் கொண்டான்.... பேறு பெற்ற ஆண்டாளே.... என் பெருமானை காத்திடு.... என் கண்ணனை காத்திடு.... மார்கழி பனி மயக்கும் இனி..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

விடாதுமழை

Image
 பேய் மழை கொட்டுது... பெறு வெள்ளம் ஓடுது... அணை தூரம் உள்ளது... அச்சம் இன்னும் ஏறுது... ஊர் காவல் போனவுக... வீடு வந்து சேரல... குடிசை தடுப்பு ஒழுகுது... குந்தும் இடமும் ஈரமே... கயித்து கட்டில்ல பெரியவ; கட்டு பிடித்து தூங்குது... தூளி ஒன்று ஆடுது; சளி கொண்டு தூங்குது... வறுமை தந்த சாமி; பசி தந்தது ஏனோ? பாத்திரம் நிறைத்த தண்ணீர்; பசியை இன்றும் போக்குமோ..?

அண்ணி

Image
கணினி பெண்ணே மதினி ஆவாய்; எங்கள் மதினி ஆவாய், ஆதி முதல்வன் என் அண்ணன்: அன்பால் ஆட்சி செய்க, வரவேற்பு இதோ.... வானவில்லின் வர்ணஜாலமாய்; வசந்தத்தின் தென்றலாய் குளிர்கால குடையாய் வருக வருக வருக வல்லமை தருக தருக...

N S கிருஷ்ணன் சிறப்பு

Image
கிருஷ்ணனில் கர்ணன்.... மதுரத்தின் ஸ்ருதி.... சிரிப்பின் சிற்பி.... ஏட்டு படிப்பில் விஞ்ஞானம் அளந்தது.... ஏழ்மையில் ஆளுமை கொண்டது.... சுந்தர பாட்டில் சுதந்திரம் கேட்டது.... மங்கிய செல்வம் மங்கா புகழ் ஒருங்கே கொண்ட சீர்மிகு சிந்தனைவாதி...! 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

அழகு முருகன்

Image
தமிழ் கடவுள்... தாட்சாயணி மகன்... குன்றெல்லாம்; குமரன் உறைவான் கொற்றவனும்; பிரணவம் கேட்டான் அவ்வை கிழவியின்; நாவில் நிற்கும் பெயரன் வேலும் மயிலும்; உனக்கு துணை வேலவாநீ என்றும்; எனக்கு துணை... 🙏🙏

வானம்

Image
தொடக்கம்,முடிவு இல்லாதவன்... தொடமுடியாத உயரம் கொண்டவன்... ஆண்டவனும் ஒளிந்திருப்பான் உன்னில்... நெருப்பு, குளுமை இருகண்கள்... இரவு சட்டையில் எத்தனை பொத்தான்கள்... நீ காணும் பூவி காதலியின் நடனம் புரிந்துடனே என்றும் தொடரட்டும்...

மீனவ குடில்

Image
மீனவ குடில் இரவு வானில் முழு மதி... தொட்டுவிட துடிக்கும் கடல் அலை... உலர்ந்து வரும் கருவாடு வாடை காற்றில் மிதக்க... பரதவர் யாவரும் துன்பம் இல்லா துயில் நிலை... கடல் உள்ளிருக்கும் சங்கு ஒலிக்க... தென்னங்கீற்று உரசல் ஒலிஎழுப்ப... அலைகள் ஆடல் பாடல் நடனம் புரிய... தன் மக்கள் துயிலுக்கு ஸ்ருதி சேர்க்கும் கடல் மாதா...! 🌴🌊🌊🌊🌊🌊🌊🌴

என்றும் வாழும் சாவித்திரி

Image
குண்டும் அழகுஎன "மெய்"உடையாள்... குமரிக்கு குழந்தைமுகம் ஆஹா... கொஞ்சும் தமிழ் கீதமாய் ஒலிக்கும் கோடம்பாக்கத்தின் ஒளிவிளக்கு... இவ்வெளிச்சம் இந்நாள் நடிகைக்கு பயிற்சி களமாகட்டும்.... 🌳🌸🌸🌳🌸🌸🌳🌸🌸🌳

யார் பேரழகி ?

Image
முறம் காது முகம் சாது நிறம் தாமரை காண்டீப வில்; முக புருவம் நேர் நாசி ரோஜா மடலை; சூருட்டிய இதழ் பாலில் மிதக்கும்; திராட்சை கண்கள் காந்த பார்வை அளந்த தனம்; அணிகலனும் தோற்கும் நெளிவு வளைவுகள்; சிலைவடிக்க தூண்டும் வழுக்குமர கால் குவிந்தமொட்டு பாதம் இவையனைத்திலும் கூடியது; இதயத்தில் அன்பு கொண்டவளே பேரழகி...! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

திருவள்ளுவர்

Image
நவீன முனிவன் அன்றே "சேர்சாட்" ஓலையில் தந்தவன் "குகுளின்" முன்னவன் சேர்ச்  செய்தால் முப்பாலும் கிடைக்கும் இன்றைய நடப்பை அன்றே கணித்தஜோசியன் எத்துறை தலைவனாயின் குறளில் முனைவர்ஆக வேண்டும்என விதி வரையறுக்கப்பட்டால் வெல்லும் இந்த பூமி....!

பெயரே கதை சொல்லும்...

அன்பே வா சொல்லி விடவா மேல்நாட்டு மருமகள் நீ நான் ஒண்டிகட்ட மன்னர் வகையறா நல்லவனுக்கு நல்லவன் வேலையில்லா பட்டதாரி உன்னை நான் சந்தித்தேன் என்னோடு நீ இருந்தால் செமபோதை நீதானே என் பொன்வசந்தம் எந் உள்ளம் உன்னை தேடுதே காதல் மெய்பட கல்யாணம் பண்ணலாம் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் இனிது இனிது சாமி போட்ட முடிச்சு இது...  

ரமணிசந்திரன்( எழுத்தாளரின் ரசிகமணி)

கதையின் ராணி... கதை தளத்தின் வாணி... முத்துமுத்தாய் பாத்திரங்கள் முன்நின்று பேசும்... மாமி எல்லாம் சாமி... கடின கணவனும்; கதாநாயகன் ஆவான்... பண்புமீறா பதிவிரதைகள் உன் நாவலில், கதாநாயகிகளாக உலாவருவர்... சோகமான நேரத்தில், சுகமான ராகமாய்  உன் புத்தகம் தரும்... உன் நாவல்; கிளர்ச்சியூட்டும் உணர்ச்சிபெருக்கும் அன்யோன்யம் கூட்டும்... கல்யாண கதை இது, சீதனத்தில் உன்புத்தகங்கள் இருக்கனும்... தொடர்பில்லா உறவில் தூரம் உறவு நான்... மடல் விடும் தூது இது...🙏🙏

கற்பனை சக்தி

Image
மாய ரூபன் மதியில் இருக்கும்; ஆய கலைகளில் வெள்ளோட்டம் பார்க்கும்; அன்பு உள்ளோரிடம் அணிகலனாய் தவழும்; தோல்வி அடைந்தாலும், வெற்றி கண்டதாய் கனா காணும்... புல்லும்,புலியாய் இருக்கும் இதன் சக்தியிலே... காட்டாறு வெள்ளமாய் கரை புரண்டு ஓடும்... வல்லமை தந்தால் அது கற்பனை சக்தி... வக்ரம் தந்தால், அளவு மிஞ்சிய அமிர்ததின் நிலையே அதன் சாட்சி...?

மலையப்பன் காண மாட்டுவண்டி (அன்று)

Image
கட கட என வண்டி தட தட என உருளுது விர் விர் என காற்று  விருட்டுனு போகுது வண்டி சொர் சொர் என மழை சொக்கி விழும் நானு சிலு சிலு என்று வாடை   சிட்டாய் பறக்குது வண்டி  சல் சல் என்று சலங்கை சப்தமிடும் மாடு குபு குபுனு வரும் புகை குப்புசாமி சுருட்டினிலே டம் டம் கொட்டு தூரம் கேட்குது மலையிலே கோவிந்தா கோவிந்தா என கோஷம் போடும் கூட்டம் இங்கே... குறிப்பு:பாட்டு குழந்தை பாடும்..

கொல்லிமலை காட்டில் ஓர் நாள்

Image
சுற்றி வனாந்தரம்... ஒற்றைபாதை பல சருகு சத்தம் சலசல... புதுமழையில் தழைகள் புதுசாய் முளைக்குது; பூக்கள் பூக்குது இணையின் சேர்ப்பிலே. ஓடையவள்... வளைந்து:நெளிந்து, யாரை கண்டு பொங்கி; மயங்கி விழுகிறது அருவி...? பகுத்தறிவாளனையும், நடுங்கிய வைக்கும் பேய்க் காற்று...! பண்பாளனும் பற்றவைப்பான் தீப்பந்தம்...! கதிரவன் கணப்புக்கு காத்திருக்கும் உயிரினம்... கதகதப்பை தேடும் மனிதஇனம்.. மறுநாள் விடியும் முன்னே இந்நாள் சுகம்தரும் பின்னே...!

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

Image
குயில் கூவும் இந்த குயில் போர் புரியும்... யார் இந்த குயிலி..? வேலுநாச்சியின் படைத்தளபதி...! காளையார் முதல் சிவகங்கை வரை பரங்கியர் கூட்டம்... கிடங்கில் வெடிகுவியல்; கொன்று குவிக்கும் கும்பினியன்... தோல்வி விளிம்பில் வேலுநாச்சிபடை... ஆயுதம் விட்டாள் குயிலி... எரிகின்ற நெய்யை பூசி; வெடிகுவியலில் விழுந்தாள்; வெடித்து சிதைந்தாள்... பரங்கியர் பதுங்கினர்... பயந்து ஒதுங்கினார்... பெண் இனத்தின் போராளி... போற்றபடவேண்டிய தமிழச்சி; மறந்த வரலாற்றை நினைவுகூறுங்கள்  நம் சந்ததினருக்கு.. வீரம் பிறக்கட்டும் தீரம் நிலைக்கட்டும்...

அமைதி

தாய் தந்தை தரவில்லை தரணி ஆள்பவர் தரவில்லை சுற்றம் தரவில்லை சூடிகொண்ட ஆண்டாள் ஆண்டவன் தரவில்லை தமிழ்த்தாய் தந்தாள் சொல் ஒன்று... பொருள் இரண்டு...

பூங்கோதை(மணமகள்)

பூங்கோதை இமையில் மை இதழில் வர்ணம்; குடத்தின் கழுத்து என்கோதை கழுத்து; உடுக்கை உடம்பு; உள்ளம் உருகும் இடுப்பு இல்லாமை கண்டு... பருத்த உலக்கை பாதம்வரை நீண்டு இருக்கும்... நிறம் பார்த்தால், பாலில் கலந்த தேயிலை சாறு... குணவதியை கொண்டாடும் ராஜன் நானே...!

பாரதியார்

பாரதி இந்த ஒற்றைசொல்லில் வீரம் பிறக்கும்; மீசை முளைக்கும்; பெண்டீர் ஆயினும்.... பாட்டில் பாலூட்டுவாய் எம் பிள்ளைகளுக்கு செந்தமிழ் நாவினால்.... பரங்கியரும் பதறுவர் நீ பாடும் சந்தத்துக்கு.... கலைவாணியே , உன் தவபுதல்வனை உன் கனரகவாகனத்தால் ஆலிங்கனம் ஏன் செய்தாய்...! தமிழ்த்தாய் தத்தெடுத்ததாலா...? பார் போற்றுகின்றது இன்று, பசியால் வாடிய வயிறு அன்று... தாய்யாய் பதறுகிறன் சேய்யாய் துடிக்கிறேன் ஓடி விளையாட நீ...ஓடோடி வா...

குற்றால மலை

Image
பொதிகை மலையவள் மேக போர்வை அவளை தழுவும்... வெண் குழலி... உன் ஐந்து பிரிவை மந்திகள் சிக்கெடுக்குதோ...? உன் சிரிப்பில் வரும் சாரல்; குத்தாலம் குதுகலிக்கும்... தேன் சிந்தும் பாவை, கீதம் பாடும் செண்பகம்... கூர்முனை கொங்கையை; வெண்பட்டில் மறைப்பாய்...! ஓ...குற்றாலநாதன்: அருகில் அமர்ந்துள்ளானோ...? குறவன், குறத்தி நீவீரோ...! கொட்டிதீர்க்கட்டும் வானவன்; குதுகலிப்பாள் என் குறவஞ்சி.🏔️🏔️

ராஜராஜசோழன்

Image
சுந்தர் சோழனின் செல்வ மகன்... பொன்னி நதியின் செல்ல சோழன்... அருள்மொழி வர்மன் இவனது பெயர். அக்காள் ஆலோசனையில் அகிலம் வென்றவன். பாண்டி,காஞ்சி தஞ்சை ஆண்ட மும்மூடிச் சோழன்... குன்றில்லா ஊரில் குன்றளவு கோவில்; அது பிரகதீஸ்வரர் கோவில்... போர் பாசறையில் கடற்படை அமைத்தான். குடவோலை தந்தான். திருவாசகம், திருமறை பொக்கிஷங்களை காத்தருளினான். தென்னிந்தியாவின் மன்னன் அவனே ராஜராஜசோழன்... வாழிய உன் புகழ்... வருக உன் வீரம்... தருக உன் ஆட்சி...👑

காதல்-5 (முரண்பாடு)

இதயத்தின் உறவில் உருவாகும் காதல்... தன் இணையின் உறவுகளை விலக்குவது ஏனோ...?

காதல்-4

நெஞ்சம் திரி இல்லாமல் வெடிக்கும் மத்தாப்பாய். முத்தாய்ப்பாய் அவள் முகம் பார்க்கயில்...!

உதயம்

உதயத்தை நோக்கி காத்திருக்கும் தாய் குஞ்சு பறவை, உள்ளத்தில் களங்கம் இல்லை கருணை உண்டு, கடமை உண்டு ஒன்று காப்பதே லட்சியம் என்று, அடைய நினைப்பது ஏகாந்தம்; அடைந்துவிட்டால் கிடைப்பது இறைநிலை...🙏

பெண் பார்க்கும் படலம்

மிடுக்கு தோரணையில் நான்... சருகு பட்டில் பந்தங்கள்... கையில் பலகாரம் கண் தேடும் இவன்தாரம்..‌. சடுதியில் வந்தாள், ஜில்லென்று ஆனது என்தேகம் கொதித்து எனது உள்ளம்... கண்கள் எல்லாம் என்னை நோக்க தலைசாய்த்து சொன்னேன்; சம்மதம்... சம்மதம்... என்று. இது இனி 'கனா காலமே'...?

திருமணப்பெண்

இருமனச் சடங்கில் இணையும் சங்கமம் துயிலில் துணை வரும் தோழி... தம் பிம்பத்தை பெத்தெடுத்தரும் பேரழகி... அசரும் போது அரவணைக்கும் அன்னை... தன்னவள் என்று நேசி உன்னவளை காதலில் வாசி அவளுக்கே நீ உயிர்மூச்சி...

காதல் 3

Image
காதல் உடல் தேவையின் உச்சரிப்பு அல்ல.... மனதில் மலர்ச்சியை கொண்டு வரும் காந்தம்..♥️

காதல் 2

Image
காதல் காதல் காட்டும் கணவனாக இருந்தால்💟 தானே கட்டுண்டு கிடப்பாள் மனைவி💝

காதல் 1

Image
காதல் ♫ இளைஞன் இளைஞிடம் வருவதல்ல... இல்லதரசன் அரசியிடம் இருக்க வேண்டியது ....?💑

கிளியோபாட்ரா

Image
கிளியோபாட்ரா கி.முவில் பிறந்த கிளியோபாட்ரா; இடை தனத்தில் வல்லினம்,மெல்லினம் காட்டியவள்.... இருட்டு தோலை வெளுத்து காட்ட கழுதை பாலில் குளித்தவள்.... கருமேனியை திருமேனியாக்கி, இவளது கண்அசைவில் ஜீசரும்,ஆண்டனியும் கடைத்தெற வழிதெரியாமல் நின்றவர்கள்.... எதிரிகள் சூழ்கையில்; நச்சுப் பாம்பு முத்தத்தை நாவில் வாங்கி, இருக்கும் வரை 'ராணியே', உலகிற்கு உணர்த்தி விட்டு சென்றவள் இவளே....!

நெல் வயல்

Image
நெல் வயல் மஞ்சள் வெளுப்பில் மயங்கிய நெற்கதிர்... என் மங்கையும் மசக்கையில் வெளுத்திருப்பாள். தலை கவிழ்துள்ளாய்யே...? ஓ...வெட்கமா...! நெல் மணியின் கணமா; ஒளிச்சேர்க்கை மன்னன் வரவா.... நீயூம் என் மகளும் ஒன்றே... முளைத்து வேறு, விதைத்து வேறு இருவரும் என் தாயே.... To know more about this

ஹைக்கூ கவிதை (காந்தி)

தன் கூனலில் நாட்டை நிமிர்த்தியது...!

காந்தி

Image
 😃😃 தலை மொட்டை சுற்றுவது ராட்டை, வாய் பொக்கை எப்போதும் புன்னகை,        தடி கொண்ட கை வழியோ அகிம்சை, உருவத்தில் தாத்தா உள்ளத்தில் பிடிதாதா, அகிம்சை மன்னன் இம்சையில் 'அந்நியன்', தந்தான் சுதந்திரம் வந்தே மாதரம்...🇮🇳🇮🇳🇮🇳💪💪

சிங்கப்பூர்