கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா

கி.முவில் பிறந்த
கிளியோபாட்ரா;
இடை தனத்தில்
வல்லினம்,மெல்லினம்
காட்டியவள்....
இருட்டு தோலை
வெளுத்து காட்ட
கழுதை பாலில்
குளித்தவள்....
கருமேனியை
திருமேனியாக்கி,
இவளது கண்அசைவில்
ஜீசரும்,ஆண்டனியும்
கடைத்தெற வழிதெரியாமல்
நின்றவர்கள்....
எதிரிகள் சூழ்கையில்;
நச்சுப் பாம்பு முத்தத்தை
நாவில் வாங்கி,
இருக்கும் வரை 'ராணியே',
உலகிற்கு உணர்த்தி விட்டு
சென்றவள் இவளே....!



Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்