Posts

Showing posts from December, 2018

ஜல்லிக்கட்டு

Image
வருது ஜல்லிக்கட்டு அடங்கமருக்கும் காளை துள்ளிக்கிட்டு... மெரினா திரண்டது வாடிவாசல் திறந்தது... திமிர் காளை அவன்: திமில் காளை அடக்குவான்... மஞ்சு விரட்டலில் மக்களை திரட்டியது என் காளைகள்... நாட்டு காளைகள்... அடிக்கட்டும் முரசு: கொட்டட்டும் தாரைதப்பட்டை.... சங்கே முழங்கு நின்று இங்கே ஜல்லிக்கட்டு என்று.... 💪🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂💪

ஒப்பனை அழகு

Image
ஒப்பனை அழகு ஓய்யாரம் காட்டும்.. உண்மை முகவதனம் உயர்வை காட்டும்.. வானின் ஒப்பனை; "வானவில்"நிரந்தரமில்லை..? வானின் நட்சத்திரங்கள்; நிரந்தரமாய் ஜொலித்திடுமே..!

ஒரு புறா கதை

Image
புறா ஒன்று கிளை ஒன்றில் அமர.... கிளை இல்லை அது வேடன் விரித்த வலை.... வலையை அது கூடாக்கியது குஞ்சும் அதில் பொரிந்தது.... வேடன் வந்தான்.... வலை உதறினான்.... வீழ்ந்தன தாய்குஞ்சுபறவை.... அந்தரத்தில் பறந்தன; அல்லோலம் பாடி.... மரகூட்டில் வாழ மறுகரை வந்தன.... கூடு அது இல்லை சிலந்தி வலை.... தொடர் அலை: தொய்வது எப்போது...?

மார்கழி மழை

Image
மழைமேகம் திரளுது மார்கழி மாதத்தில்... மங்கையர் குளிரவா...? மாதவனை காணவா...? கோதை கோலமிட்டாள்; கொட்டும் மழை அழிக்கலாமோ...? வெண்ணை திருடியவனை... 'பண்'ணை வாசித்து துயில் எழுப்புவர்... கார்வர்ணனை காண கார்மேகம் வந்ததோ...? ஏழுமலையானை ஏழுயிசையில் எழுப்புங்கள்... எம்பெருமான் என்னையும் ரட்சிக்கட்டும்மே...!

மீசை பாரதி

Image
செந்தமிழ் பேசும் வாய்க்கு "கொம்பு"சீவி வைத்தான் "மீசை"எனும் தலைப்பாகையை...