Posts

இன்றைய மழையின் காட்சி..

Image
அன்று மஞ்சள் வானம் பூத்தது... இன்று மழையை வானம் பெய்கிறது.... உக்கிரனே உன் காணல் நீர் காணாமல் போய்விட்டது... தெரு வாய்க்கால் வரப்பு வாய்க்காலாய் மாறி போனது... நீரோடை தெளிந்து ஓடுதே...!! அதோ இறைவன் பாசறையில் இடி முழக்கம். ஆ...! மின்னல் அம்பு மண்ணில் பாய்கிறதே....! திமிர் நெஞ்சம் அச்சம் கொண்டது... அது அடுப்பாங்கரை வரை ஓடி  ஒளிய சொன்னது... மழையே மழையே நீ மீண்டும் மீண்டும் வா... சித்திரை அனலில் உறக்கம் வருமா...? நீ வந்ததால் இனி இமைவிழியும் குளுமையில் மூடும். காற்றின் மொழியில் கடிதம் பொழிகிறேன் மழையே மழையே மீண்டும் மீண்டும் வா... மொட்டை மாடியில் நான் . ஐய்..! என் முந்தானை நுனி காற்றில் பறக்கிறதே பட்டமாய்..! என் கூந்தல் கற்றை பேய் ஆட்டம் ஆடுதே... தலை நிமிர்வில் மேக கொண்டல் கருமேக கொண்டல். என் முகத்தில் முத்த மழை... பொழியும் என் மழையே நீ வா வா....🌧️
Image
உன் பயண வண்டி ஓய்வெடுக்குதோ  ஞாயிறு அண்டி ...

கல்லில் செடி

Image
கல்லும் இளகுதோ செடியும் முளைக்கிறதே..! இவன் மனிதன் இறுகிவிட்டான் பாறை போன்றதன்..! இயற்கை இடமாறுகிறது மனிதன் தடமாறுகிறான். கல்லுக்குள்ளே ஈரம் கசிகிறதே..? நமக்குள்ளே ஈரல் மட்டும் ஏனோ..? மனிதர்களை  மனிதனாக  மதியுங்கள் அப்படி இருந்தால் முள்ளும் மலரும்.

மியாவ்.. மியாவ் .. பூனை

Image
இரவுநண்பன் இவன் தினமும் வருவதில்லை யார் வளர்க்கும் பூனை இது..? எனக்கும் தெரிவதில்லை. சால்னா அடித்து சாப்பிட்ட அன்று வந்திடுவான் இவன்.. வாசனை மன்னன்னாஇல்லை வார இருமுறை என என் கணக்கீட்டை அறிந்தவனா..! இன்றும் வந்துவிட்டான் ஒட்டிய வயிற்றில் பசியோடு வந்திருக்கிறான்.. பரிதவிப்பில் நாங்கள் இருவர் என்ன போடுவது என்று நானும்.. எத்தனை போடுவாய் என்று அவனும்.. பிஸ்கட் போட்டாச்சு.. சோறு போட்டாச்சு.. எதையும் தொடவில்லை..? எலும்புகறி வேண்டுகிறான் எங்கு நான் போவது..?  வாசனையும் மறந்தான் கணக்கீட்டையும் மறந்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் இதுதானோ..!

குமரி இவள்

Image
பூமி குமரியே.. பச்சை சேலையை மடிப்பு வைத்து அழகு அழகாக கட்டி உள்ளாய்யே... வீடுகள் அலங்கார  கல்பதிக்கங்களாக இருக்கின்றனவோ... மனம் ரம்மியம். காத்திடுதல் நாமாக வேண்டும் ....

மழையே..

Image
பூமி குளிர சடுதியில் வா... தண்ணீர் முத்தே தாகம் தணிக்க  விரைந்து வா... மழையில் குளித்து நாளாகி விட்டது... இடி..முழக்கத்தோடு கொண்டாட வா என் மழையே...?

வானவில் லே..

Image
மின்னல் தீண்டலில் மேனி  செவக்கிறாள் வானவில்.. ஏழுவர்ணமாய்...!