இன்றைய மழையின் காட்சி..

அன்று
மஞ்சள் வானம் பூத்தது...
இன்று
மழையை வானம் பெய்கிறது....
உக்கிரனே
உன் காணல் நீர்
காணாமல் போய்விட்டது...
தெரு வாய்க்கால்
வரப்பு வாய்க்காலாய்
மாறி போனது...
நீரோடை தெளிந்து ஓடுதே...!!
அதோ
இறைவன் பாசறையில்
இடி முழக்கம்.
ஆ...!
மின்னல் அம்பு
மண்ணில் பாய்கிறதே....!
திமிர் நெஞ்சம்
அச்சம் கொண்டது...
அது அடுப்பாங்கரை வரை
ஓடி  ஒளிய சொன்னது...
மழையே மழையே நீ
மீண்டும் மீண்டும் வா...
சித்திரை அனலில்
உறக்கம் வருமா...?
நீ வந்ததால் இனி
இமைவிழியும் குளுமையில் மூடும்.
காற்றின் மொழியில்
கடிதம் பொழிகிறேன்
மழையே மழையே
மீண்டும் மீண்டும் வா...
மொட்டை மாடியில் நான் .
ஐய்..!
என் முந்தானை நுனி
காற்றில் பறக்கிறதே பட்டமாய்..!
என் கூந்தல் கற்றை
பேய் ஆட்டம் ஆடுதே...
தலை நிமிர்வில்
மேக கொண்டல்
கருமேக கொண்டல்.
என் முகத்தில்
முத்த மழை...
பொழியும் என் மழையே
நீ வா வா....🌧️

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்