ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750


குயில் கூவும்
இந்த குயில்
போர் புரியும்...
யார் இந்த குயிலி..?
வேலுநாச்சியின்
படைத்தளபதி...!
காளையார் முதல்
சிவகங்கை வரை
பரங்கியர் கூட்டம்...
கிடங்கில் வெடிகுவியல்;
கொன்று குவிக்கும் கும்பினியன்...
தோல்வி விளிம்பில்
வேலுநாச்சிபடை...
ஆயுதம் விட்டாள் குயிலி...
எரிகின்ற நெய்யை பூசி;
வெடிகுவியலில் விழுந்தாள்;
வெடித்து சிதைந்தாள்...
பரங்கியர் பதுங்கினர்...
பயந்து ஒதுங்கினார்...
பெண் இனத்தின் போராளி...
போற்றபடவேண்டிய தமிழச்சி;
மறந்த வரலாற்றை
நினைவுகூறுங்கள் நம்
சந்ததினருக்கு..
வீரம் பிறக்கட்டும்
தீரம் நிலைக்கட்டும்...


Comments

Post a Comment

Popular posts from this blog

மான்