Posts

Showing posts from November, 2018

திருமலைநாயக்கர் மஹால்

Image
  மதுரை நகரில் திருமலை மஹால்.... திருமலை நாயக்கர் வாழ்ந்த இடம்... வரலாற்று இடம்... வலிமை கட்டடம் வாண்டுகள் கிறுக்கலில் வனப்புகுறையும் இடம்.... துண்டு கட்டடம் தூணை பறைசாற்றும்.... தொல்லியல் துறை தொய்வை சரிசெய்யட்டும்.... வரலாறு வாழ தூணை நிலைக்கசெய்யுங்கள்...

குழந்தை

Image
தலை முட்டி பூமி வந்து இலை கட்டி பெயர் சூட்டி புன்னகை காட்டும் பூந்தளிர் பூவே... தொட்டில் ஆடி... தரை தவிழ்ந்து... நடவண்டி ஓட்டி; பிடியின்றி நடக்கையில் பித்தாவாள் தாய்... வளர் பிள்ளை முழுமதியாய் வளர முத்தாய்ப்பாய் முகம் காட்டும் அன்னை அவள்...

ரோஜா

Image
  முள் செடியில் சிரிக்கும் ரோஜா..! 'ஜாதி' கொண்ட ரோஜா...! "வண்ணத்தில்"... குணம் ஒன்றுதான்; மனம் கவர்வது... ஆண்டவன் ஆண்டு இருப்பவன் ஆயினும் தொடுத்த மாலை தோள் புகும்... அழகு அதிகம் ஆயுள் குறைவு இருந்தும் சிரிக்கிறாய் என் ரோஜா மலரே... உன் மனம் தந்துவிடு... 😃😃😃🌹🌹🌹🌹🌹🌹😃😃😃

பூஞ்சோலை

Image
மலர்ச்சோலை மகிழ்ச்சி எல்லை இங்கு இல்லை... பசுமை போர்வையில் உள்ளம் குளிரும்... அடர் புதர் ஏங்கும்; சூரிய கதிர் தாக்கம்... புல்வெளி மெத்தை பாததடம் காணும்... பூக்கள் சிரிக்கும் புதுவாசனை வீசும் தேன் சுவை கொடுக்கும் பூஞ்சோலை காண்பீர் புதுமனம் கொள்வீர்... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மான்

Image
புல்லில் மான் புள்ளி மான் சீதை கவர்ந்த மாய மான் சீவிய கொம்புஅது சிங்காரத்தின் அழகுஅது வேடன் இங்கில்லை வேண்டிய மட்டும் மேய்ந்து கொள் மேயாத கானகத்தில்...

வரப்பு

Image
ஓடும் தண்ணீரீல் ஓடு தேங்காய் நட்டியது யாரோ..? வரப்பாய் மரங்கள்...!

வாடைக்காற்று

Image
'வாடை'அவள் வடக்கிருந்து வருகிறாள்... 'வனமகன்' காத்திருக்கிறேன் வறட்சியை நீக்கி விடு... நீர் உருகி அருவியானாய் நிலம் தாங்கும் நான் உன் தேவன் ஆவேன் நீயும் நானும்  சேர்ந்தால் 'பசுமை' அங்கே  பிறக்கும்... 🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️🌪️

வீட்டு வெள்ளாமை

Image
கூரை வீடு மேயும் கோழி.. நெல்லும் காயும் உரலும் இடிபடும் வேலை பாரு மேனி காயும்.. பொதிமாட்டு வண்டி புறவாசல் வரும் பொட்டு வண்டி மூட்டைகட்டி செல்லும்.. வெற்றிலை சீவல் மெல்லும் பாட்டி வெள்ளாம கணக்க வேண்டி பாப்பா.. ஊரபானை கழுவும் அம்மா உளுந்தவடை தட்டும் சித்தி நெற்குதிர் நிரப்பும் அத்தை நெடிய சித்தப்பா வீடுவந்து சேரல கடைக்குட்டி சித்தப்பா காட்டு தோப்புல.. அப்பா வந்தா அனைத்தும் ஒதுங்கும் அண்டா சோறு உலையில கொதிக்கும்.. கரும்பு திங்க இளஞ்சிட்டுகளா வாங்க கட்டுவண்டியில கிடக்கு கடித்து தின்ன வாங்க.. ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

வான்மதி

Image
கோடையின் வெப்பத்தில் குளிர்ந்த நிலவே உன் முகம் கண்டதும் மலர்ந்தேன்... மலையின் வாசத்தை மதியழகி நீகொண்டு வா ஏகாந்த இரவில் வெளிச்சம் காட்டும் வெண் மதியே... என் வான்மதியும் வந்து சேர வழிகாட்டிடு... 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

கண்ணகி வரம் தா

Image
பறல் கல் பாத சிலம்பு கொலையுண்ட கோவலன், கொற்றவனே குற்றவாளி; அரசபையில் அரற்றினால்... பாண்டியன் சடலமாய் நீண்டான்... சூதுவாது இல்லை சூட்சுமம் புரிவதில்லை... வென்னீர் ஊற்று மாரை நனைத்து சுற்றி பார்த்தால் சூனியங்களாக தெரிந்தது... தமிழ் நா... அசைத்தாள் தனல் தெறித்தது மதுரை எரிந்தது... என் கொற்றவையே கண்ணகியே... அதே தமிழ்நாவால் கேட்கிறேன்... எரிக்கும் தனலை என்னுள் தந்துவிடு👀