மதுரை நகரில் திருமலை மஹால்.... திருமலை நாயக்கர் வாழ்ந்த இடம்... வரலாற்று இடம்... வலிமை கட்டடம் வாண்டுகள் கிறுக்கலில் வனப்புகுறையும் இடம்.... துண்டு கட்டடம் தூணை பறைசாற்றும்.... தொல்லியல் துறை தொய்வை சரிசெய்யட்டும்.... வரலாறு வாழ தூணை நிலைக்கசெய்யுங்கள்...
குயில் கூவும் இந்த குயில் போர் புரியும்... யார் இந்த குயிலி..? வேலுநாச்சியின் படைத்தளபதி...! காளையார் முதல் சிவகங்கை வரை பரங்கியர் கூட்டம்... கிடங்கில் வெடிகுவியல்; கொன்று குவிக்கும் கும்பினியன்... தோல்வி விளிம்பில் வேலுநாச்சிபடை... ஆயுதம் விட்டாள் குயிலி... எரிகின்ற நெய்யை பூசி; வெடிகுவியலில் விழுந்தாள்; வெடித்து சிதைந்தாள்... பரங்கியர் பதுங்கினர்... பயந்து ஒதுங்கினார்... பெண் இனத்தின் போராளி... போற்றபடவேண்டிய தமிழச்சி; மறந்த வரலாற்றை நினைவுகூறுங்கள் நம் சந்ததினருக்கு.. வீரம் பிறக்கட்டும் தீரம் நிலைக்கட்டும்...
புல்லில் மான் புள்ளி மான் சீதை கவர்ந்த மாய மான் சீவிய கொம்புஅது சிங்காரத்தின் அழகுஅது வேடன் இங்கில்லை வேண்டிய மட்டும் மேய்ந்து கொள் மேயாத கானகத்தில்...
Comments
Post a Comment