Posts

Showing posts from September, 2018

ஷாஜகான் காதல்

Image
இளம் பருவத்தில் பிரிந்து, இனிமை நினைவுகள் தனதாக்கி, பின் தஞ்சம் புகுந்த; தளிர் பெண்ணை தன்னவளாக்கி, காதல் மனைவியின் கண் அசைவில் கஜானாவும் கருவூலமும் செல்லும், பதிநாலாவது மகவை காணும்முன்னே கண்மூடிய மனைவி; மருவி நின்ற கணவன், காதலி நினைவை கல்லறையில் எழுப்பி; தன்னுயிர் போகும் நிலையிலும் தாஜ்மகாலையே உற்று நோக்கியவன்...!

தாஜ்மகால் காதல் ஆரம்பம்

Image
தர்பார் தளத்தில் ஆசப்கான் மகள் அப்சரஸ்ஸாய் நுழைந்து கற்கண்டை வைரமாய் ஜொலிக்க செய்து குறும்புதனத்தில் கோமகன் உள்ளம் கவர்ந்ததால் ஜாஜகானின் இதயம் கவர்ந்து உதயமானால் தாஜ்மகால் பேரழகி...

மேகம்

மேகம் உன் சிறப்பை வகுத்தான் வள்ளுவன்; பூமியின் மூச்சு காற்று நீ; மலையை உரசும் குசும்பன்; ஓ... அப்போது மழை தருகிறாய்யோ? கருப்பு மேகமே ஆற்றை பெருக்கும்; கருவறை கடவுள் உன் நிறமே.... பூமியை குளிர்விக்கும் வருணன்; புதுமலர் பூக்கும் நீவருகையில்... மேகநாதா மேகங்களை கொண்டுவா; மேன்மை அடையும் இந்த பூமிமாதா...

உன் முகம்

போட்டோ முகம் உன் முகம் கலை முகம் கலர் முகம் வட்ட முகம் வடிவான முகம் மலர்ந்த முகம் மகிழ்ச்சி முகம் முகமலர சொன்னேன் அகம் மகிழ்ந்தேன்...🌷     

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இடர் இன்றி சுடர் போல் பிரகாசித்து, மலர் மணம் வீசி, மகிழ்ச்சி காற்று வீடேங்கும் பரவி, "வளமை" வாண்டுகளுடன் தொடரட்டும்....🌷🌷🌷

நான் விரும்பும் பெண்

Image
"நான் விரும்பி படிக்கும் சரித்திர நாயகி இவளோ? அழுகையில் 'வானதி' அறிவில் 'குந்தவை' அழகில் 'நந்தினி' அன்பில் 'பூங்குழலி' என்ன பார்க்கிறாய், பொன்னியின் செல்வன் நாயகியே, பொங்கி வரும் காவிரியே விரைந்து வா.... பொன்னி நதியாய் வா...வா...

மழை

மேக மகள் அழுகின்றாள், நில மகள் கோலமிடுகிறாள், இடி நகைக்கிறாள், மின்னல் படம் பிடிக்கிறாள், காட்சி இதை கண்டாய்யோ தோழி....

கணபதி போற்றி

தம்பி உடையோன் தும்பி உடையோன் தொந்தி உடையோன் பாதம் பணிந்து பார்வதி பிள்ளை நம் பிள்ளையார் போற்றி போற்றி