ஷாஜகான் காதல்


இளம் பருவத்தில் பிரிந்து,
இனிமை நினைவுகள் தனதாக்கி,
பின் தஞ்சம் புகுந்த;
தளிர் பெண்ணை தன்னவளாக்கி,
காதல் மனைவியின்
கண் அசைவில் கஜானாவும்
கருவூலமும் செல்லும்,
பதிநாலாவது மகவை
காணும்முன்னே கண்மூடிய மனைவி;
மருவி நின்ற கணவன்,
காதலி நினைவை
கல்லறையில் எழுப்பி;
தன்னுயிர் போகும் நிலையிலும்
தாஜ்மகாலையே உற்று நோக்கியவன்...!


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்