Posts

Showing posts from February, 2019

டீரிங்...டீரிங்.. காலிங்பெல் (சிறுகதை)

(காட்சி ஆரம்பம்:மனைவி கோபமாக கண்ணைசுருக்கி கதவை திறத்தல்) மதன்: ஹாய்..அப்படி பார்க்காதடா...சாரி டியர்... வெளில போகலாம்னு சொல்லியிருந்தில....ரம்ப ப்ரண்ட் பிடிச்சுடான்...அதான்டா...சாரி.. சாருலதா: சீனிவாசன் பேரனுல... டெய்லி ஒரே பல்லவி தான்... மதன்: பல்லவி இல்ல சரணு... சத்தியம்ப்பா.... சாருலதா:ஹா..ஹா... உங்களை....(இன்னும் சிரிக்கிறாள்) மதன்:அப்பா...ஒருவழியா... சிரிச்சிட்டே... இன்னைக்கு என்ன டிபன்...? சாருலதா:காபி அன்ட் காய்ந்த ஃப்ரட்.. மதன்:இது டிபனா..? இன்னைக்கு போட்டானே ஆபிஸ் கேன்டீன்ல...மொரு மொரு ரவா தோசை...நெய்சேமியா கேசரி...சாம்பார்வடை... பொட்டுக்கடலை சட்னி... ஐயோ..!அதோட வாசம் என் கைவிட்டு இன்னும் போகலை....நீ என்னனா ஒன்னும்இல்லாதற்கு 'டிபன்னு' சொல்லிக்கிற...? சாருலதா:(முகம் சிவக்க)பார்க்கிறாள்.... மதன்:ஐ..ஐயோ..உளரிட்டேனே....அங்கே பார்த்தேனா... இங்கே ஒன்னும்மில்லையா.அதான் சொன்னேன்....ஹீ ஹீ.. சாருலதா:கையில வாசம் எப்படி வந்திச்சு... தொட்டு தொட்டு சாமி கும்பிட்டுங்களா...? மதன்:ஆமா...ச்சீ..இல்ல...             மறுபடியும் முதல் காட்சி ...

மொழி(சிறு கதை)

    மொழி (என்னும் தலைப்பில் நூறு வார்த்தை கதை) "தேன்மொழி; கடற்கரைக்கு வரச்சொன்னாலே..என்பதற்காக ஆவலில் சென்றான் மொழிவளவன்.வந்த வளவன், தேன்மொழி அருகில் அமர்ந்தான்".                "என்ன பார்க்கிற தேன்மொழி"....             "இல்ல என்னை கல்யாணம் பண்ணிக்கிறேனு, எங்க அப்பாட்ட சொன்னீங்களாமே...தேதி வேற குறீச்சிட்டாரு... உங்களிடம்;வீடு வாசல்,வேலை எல்லாம் இருக்கு.ஆள் நல்லாத்தான் இருக்கிறீங்க... நான்.. ஏன்..?"            "தேன்மொழி:ஒரே ஒரு காரணம்தான்...உன் தாய்மொழி பற்று.. தமிழ் மொழி பற்று.உன் கவிதைக்கு நான் அடிமை..,ஒரு நிபந்தனை..,நம்ம பிள்ளைகளுக்கு நான்தான் பெயர் வைப்பேன்...ஆணா இருந்தா அருள்மொழிவர்மன்,பெண்ணுணா மொழியழகி...சரியா".           "குபீரென்று சிரித்தாள்.. தேன்மொழி".       தமிழ் சங்கமம் இங்கே திருமணச்சங்கமாய் மாறியது....

சிரிக்கும் ரோஜா

Image
பிரிந்த ரோஜா செடியிலிருந்து... சிரிக்க மட்டுமே தெரியும் உனக்கு... ஒருநாள் வாழ்க்கை தெரியுமா.? உனக்கு காதலர் கையிலும் கல்யாண மாலையிலும் கட்டுண்டு இருப்பாய்... சிறப்பாய்..சிரிப்பாய்