மொழி(சிறு கதை)

    மொழி (என்னும் தலைப்பில் நூறு வார்த்தை கதை)


"தேன்மொழி; கடற்கரைக்கு வரச்சொன்னாலே..என்பதற்காக ஆவலில் சென்றான் மொழிவளவன்.வந்த வளவன், தேன்மொழி அருகில் அமர்ந்தான்".     
          "என்ன பார்க்கிற தேன்மொழி"....
            "இல்ல என்னை கல்யாணம் பண்ணிக்கிறேனு, எங்க அப்பாட்ட சொன்னீங்களாமே...தேதி வேற குறீச்சிட்டாரு... உங்களிடம்;வீடு வாசல்,வேலை எல்லாம் இருக்கு.ஆள் நல்லாத்தான் இருக்கிறீங்க... நான்.. ஏன்..?"
           "தேன்மொழி:ஒரே ஒரு காரணம்தான்...உன் தாய்மொழி பற்று.. தமிழ் மொழி பற்று.உன் கவிதைக்கு நான் அடிமை..,ஒரு நிபந்தனை..,நம்ம பிள்ளைகளுக்கு நான்தான் பெயர் வைப்பேன்...ஆணா இருந்தா அருள்மொழிவர்மன்,பெண்ணுணா மொழியழகி...சரியா".
          "குபீரென்று சிரித்தாள்.. தேன்மொழி".

      தமிழ் சங்கமம் இங்கே திருமணச்சங்கமாய் மாறியது....

Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்