வீட்டு வெள்ளாமை

கூரை வீடு
மேயும் கோழி..
நெல்லும் காயும்
உரலும் இடிபடும்
வேலை பாரு
மேனி காயும்..
பொதிமாட்டு வண்டி
புறவாசல் வரும்
பொட்டு வண்டி
மூட்டைகட்டி செல்லும்..
வெற்றிலை சீவல்
மெல்லும் பாட்டி
வெள்ளாம கணக்க
வேண்டி பாப்பா..
ஊரபானை கழுவும் அம்மா
உளுந்தவடை தட்டும் சித்தி
நெற்குதிர் நிரப்பும் அத்தை
நெடிய சித்தப்பா
வீடுவந்து சேரல
கடைக்குட்டி சித்தப்பா
காட்டு தோப்புல..
அப்பா வந்தா
அனைத்தும் ஒதுங்கும்
அண்டா சோறு
உலையில கொதிக்கும்..
கரும்பு திங்க
இளஞ்சிட்டுகளா வாங்க
கட்டுவண்டியில கிடக்கு
கடித்து தின்ன வாங்க..

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐




Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்