மியாவ்.. மியாவ் .. பூனை
தினமும் வருவதில்லை
யார் வளர்க்கும்
பூனை இது..?
எனக்கும் தெரிவதில்லை.
சால்னா அடித்து
சாப்பிட்ட அன்று
வந்திடுவான் இவன்..
வாசனை மன்னன்னாஇல்லை
வார இருமுறை என
என் கணக்கீட்டை அறிந்தவனா..!
இன்றும் வந்துவிட்டான்
ஒட்டிய வயிற்றில்
பசியோடு வந்திருக்கிறான்..
பரிதவிப்பில் நாங்கள் இருவர்
என்ன போடுவது என்று நானும்..
எத்தனை போடுவாய் என்று அவனும்..
பிஸ்கட் போட்டாச்சு..
சோறு போட்டாச்சு..
எதையும் தொடவில்லை..?
எலும்புகறி வேண்டுகிறான்
எங்கு நான் போவது..?
வாசனையும் மறந்தான்
கணக்கீட்டையும் மறந்தான்
பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்
இதுதானோ..!

Comments
Post a Comment