மார்கழி மழை


மழைமேகம் திரளுது
மார்கழி மாதத்தில்...
மங்கையர் குளிரவா...?
மாதவனை காணவா...?
கோதை கோலமிட்டாள்;
கொட்டும் மழை அழிக்கலாமோ...?
வெண்ணை திருடியவனை...
'பண்'ணை வாசித்து
துயில் எழுப்புவர்...
கார்வர்ணனை காண
கார்மேகம் வந்ததோ...?
ஏழுமலையானை
ஏழுயிசையில்
எழுப்புங்கள்...
எம்பெருமான்
என்னையும் ரட்சிக்கட்டும்மே...!




Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்