பாரதியார்
பாரதி
இந்த ஒற்றைசொல்லில்
வீரம் பிறக்கும்;
மீசை முளைக்கும்;
பெண்டீர் ஆயினும்....
பாட்டில் பாலூட்டுவாய்
எம் பிள்ளைகளுக்கு
செந்தமிழ் நாவினால்....
பரங்கியரும் பதறுவர்
நீ பாடும் சந்தத்துக்கு....
கலைவாணியே ,
உன் தவபுதல்வனை
உன் கனரகவாகனத்தால்
ஆலிங்கனம் ஏன் செய்தாய்...!
தமிழ்த்தாய் தத்தெடுத்ததாலா...?
பார் போற்றுகின்றது இன்று,
பசியால் வாடிய வயிறு அன்று...
தாய்யாய் பதறுகிறன்
சேய்யாய் துடிக்கிறேன்
ஓடி விளையாட
நீ...ஓடோடி வா...
Comments
Post a Comment