குந்திதேவி கதை


தத்துபுத்திரி...
குந்திபோஜனிடம்
செல்லமாய்வளர்ந்தது...
தூர்வாசரின் மந்திரம்
மகவுகாண செய்து...
வீசப்பட்ட குழந்தை
மிதந்து சென்றது;
ஆற்றில்அல்ல அவள்
கண்ணீர் துளியில்...
சுயம்வரம் கண்டு
பாண்டுகரம் கொண்டு
அஸ்தினாபுரம் வந்தாள்...
வனவாசத்தில் பாண்டு
வகையாய் மாட்டிஅவன்
இயலாமை கண்டு
இல்லாளே குழந்தைபெற்றாள்
மாண்ட பாண்டு:
மாற்றுகாதலி உடன்கட்டையில்...
மைந்தர் வளர
தமையன் துணையில்
சிறந்த வீரர்களை
சிறப்பாய் உருவாக்கினாள்...
போர் பாசறையில்
போற்றப்படும் கர்ணன்;
தன்மகன் எனகண்டாள்...
குருசேத்திரம் நடந்தது.
மாண்டான் கர்ணன்.
மடைதிறந்தாள் குந்தி;
மகனேகர்ணா என்று...
விடை கிடைத்தது
விதி அழித்தது
இருவரின் பழிபாவங்களை...

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢


Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்