ரமணிசந்திரன்( எழுத்தாளரின் ரசிகமணி)

கதையின் ராணி...
கதை தளத்தின் வாணி...
முத்துமுத்தாய் பாத்திரங்கள்
முன்நின்று பேசும்...
மாமி எல்லாம் சாமி...
கடின கணவனும்;
கதாநாயகன் ஆவான்...
பண்புமீறா பதிவிரதைகள்
உன் நாவலில்,
கதாநாயகிகளாக உலாவருவர்...
சோகமான நேரத்தில்,
சுகமான ராகமாய் 
உன் புத்தகம் தரும்...
உன் நாவல்;
கிளர்ச்சியூட்டும்
உணர்ச்சிபெருக்கும்
அன்யோன்யம் கூட்டும்...
கல்யாண கதை இது,
சீதனத்தில் உன்புத்தகங்கள் இருக்கனும்...
தொடர்பில்லா உறவில்
தூரம் உறவு நான்...
மடல் விடும் தூது இது...🙏🙏




Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்