ஆண்டாள்
கன்னியர் புடைசூழ;
கார்குழனை காண,
ஆண்டாள் வருகிறாள்....
ஆடி பாடி
ஆலயம் வருகிறாள்....
என் கண்ணன்
'பாவை'கண்டான்னில்லை;
பாவை கேட்டான்,
'திருபாவை'கேட்டான்....
குழலில் மயக்கியவன்
குரலில் மயங்கினான்....
ஆழ்வாரை கொள்ளாமல்,
ஆண்டாளை கொண்டான்....
சூடிக் கொடுத்தவளை
சூடிக் கொண்டான்....
பேறு பெற்ற
ஆண்டாளே....
என் பெருமானை
காத்திடு....
என் கண்ணனை
காத்திடு....
மார்கழி பனி
மயக்கும் இனி.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments
Post a Comment