கொல்லிமலை காட்டில் ஓர் நாள்


சுற்றி வனாந்தரம்...
ஒற்றைபாதை பல
சருகு சத்தம் சலசல...
புதுமழையில் தழைகள்
புதுசாய் முளைக்குது;
பூக்கள் பூக்குது
இணையின் சேர்ப்பிலே.
ஓடையவள்...
வளைந்து:நெளிந்து,
யாரை கண்டு பொங்கி;
மயங்கி விழுகிறது அருவி...?
பகுத்தறிவாளனையும்,
நடுங்கிய வைக்கும்
பேய்க் காற்று...!
பண்பாளனும் பற்றவைப்பான்
தீப்பந்தம்...!
கதிரவன் கணப்புக்கு
காத்திருக்கும் உயிரினம்...
கதகதப்பை தேடும் மனிதஇனம்..
மறுநாள் விடியும் முன்னே
இந்நாள் சுகம்தரும் பின்னே...!




Comments

Popular posts from this blog

ஒரு குயிலின் கதை தெரியுமா ?1750

மான்