யார் பேரழகி ?
முகம் சாது
நிறம் தாமரை
காண்டீப வில்;
முக புருவம்
நேர் நாசி
ரோஜா மடலை;
சூருட்டிய இதழ்
பாலில் மிதக்கும்;
திராட்சை கண்கள்
காந்த பார்வை
அளந்த தனம்;
அணிகலனும் தோற்கும்
நெளிவு வளைவுகள்;
சிலைவடிக்க தூண்டும்
வழுக்குமர கால்
குவிந்தமொட்டு பாதம்
இவையனைத்திலும் கூடியது;
இதயத்தில் அன்பு
கொண்டவளே பேரழகி...!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments
Post a Comment