விடாதுமழை
பேய் மழை கொட்டுது...
பெறு வெள்ளம் ஓடுது...
அணை தூரம் உள்ளது...
அச்சம் இன்னும் ஏறுது...
ஊர் காவல் போனவுக...
வீடு வந்து சேரல...
குடிசை தடுப்பு ஒழுகுது...
குந்தும் இடமும் ஈரமே...
கயித்து கட்டில்ல பெரியவ;
கட்டு பிடித்து தூங்குது...
தூளி ஒன்று ஆடுது;
சளி கொண்டு தூங்குது...
வறுமை தந்த சாமி;
பசி தந்தது ஏனோ?
பாத்திரம் நிறைத்த தண்ணீர்;
பசியை இன்றும் போக்குமோ..?

Comments
Post a Comment