மலையப்பன் காண மாட்டுவண்டி (அன்று)
கட கட என வண்டி
தட தட என உருளுது
விர் விர் என காற்று
விருட்டுனு போகுது வண்டி
சொர் சொர் என மழை
சொக்கி விழும் நானு
சிலு சிலு என்று வாடை
சிட்டாய் பறக்குது வண்டி
சல் சல் என்று சலங்கை
சப்தமிடும் மாடு
குபு குபுனு வரும் புகை
குப்புசாமி சுருட்டினிலே
டம் டம் கொட்டு
தூரம் கேட்குது மலையிலே
கோவிந்தா கோவிந்தா என
கோஷம் போடும் கூட்டம் இங்கே...
குறிப்பு:பாட்டு
குழந்தை பாடும்..

Comments
Post a Comment