கவிஞனின் திருமண விழா ஏற்பாடு
வானவில்லே;
வாயில் தோரணம் கட்டு....
வானதி;
நட்சத்திரபூ தொடு....
கார்மேகனே;
பன்னீர் தெளி....
ஆதித்தனே;
அக்னியை வார்த்திடு....
வருணணே;
வெஞ்சாரம் வீசு....
நளனே;
நளபாகம் சமை....
கார்த்தியாயினி;
தோழியாய் இரு....
இடியே;
மத்தளம் வாசி....
மின்னலே;
காணொளி எடு....
ஆயர்பாடிர்;
ஆடி பாடுங்கள்....
அன்பே ஆனந்தமா....
அடைந்தாய்யா சந்தோஷம்....
இதுதான் நம் இல்ல
திருமண விழா ஏற்பாடு....
🌿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹☘️

Comments
Post a Comment