கற்பனை சக்தி
மாய ரூபன்
மதியில் இருக்கும்;
ஆய கலைகளில்
வெள்ளோட்டம் பார்க்கும்;
அன்பு உள்ளோரிடம்
அணிகலனாய் தவழும்;
தோல்வி அடைந்தாலும்,
வெற்றி கண்டதாய்
கனா காணும்...
புல்லும்,புலியாய்
இருக்கும் இதன் சக்தியிலே...
காட்டாறு வெள்ளமாய்
கரை புரண்டு ஓடும்...
வல்லமை தந்தால்
அது கற்பனை சக்தி...
வக்ரம் தந்தால்,
அளவு மிஞ்சிய அமிர்ததின்
நிலையே அதன் சாட்சி...?

Comments
Post a Comment