பள்ளி தோழியே...
வயக்காடு வரப்பில்
தூக்குசட்டி ஆட்டிக்கிட்டு
துள்ளிநடந்து வந்ததென்ன...
பள்ளிதோழியே பந்தமாய்
பாக்குமிட்டாய் வாங்கிகிட்டு
காக்காகடி தின்னதுதென்ன...
ஆத்து மணலில்
கோட்டை கட்டினோமே...
அத்தி மரத்தில்
ஊஞ்சல் ஆடியிருந்தோமே...
வைக்கோலில் ஒளிந்திடுவோமே...
வண்டியில்வரும் கரும்பை
வழியிலே உடைத்திடுவோமே...
கோயில்மணி அடிக்கையிலே
பொங்கல்வாங்க ஓடிடுவோமே...
பொங்கிவரும் ஆத்தினிலே
பொழுதை கழித்திடுவோமே...
பிள்ளை வந்தான்னடி
பெண்பேசி சென்றான்னடி...
பிரிந்தது நம்மண்ணில்லடி
பேதையை தேடுவாய்யாடி...!
மீண்டும் பார்ப்போமா...?
பள்ளிதோழியாய் சந்திப்போமா...?
கேள்வியில் நிற்கிறேன்
வாராய் என்தோழியே....
தூக்குசட்டி ஆட்டிக்கிட்டு
துள்ளிநடந்து வந்ததென்ன...
பள்ளிதோழியே பந்தமாய்
பாக்குமிட்டாய் வாங்கிகிட்டு
காக்காகடி தின்னதுதென்ன...
ஆத்து மணலில்
கோட்டை கட்டினோமே...
அத்தி மரத்தில்
ஊஞ்சல் ஆடியிருந்தோமே...
வைக்கோலில் ஒளிந்திடுவோமே...
வண்டியில்வரும் கரும்பை
வழியிலே உடைத்திடுவோமே...
கோயில்மணி அடிக்கையிலே
பொங்கல்வாங்க ஓடிடுவோமே...
பொங்கிவரும் ஆத்தினிலே
பொழுதை கழித்திடுவோமே...
பிள்ளை வந்தான்னடி
பெண்பேசி சென்றான்னடி...
பிரிந்தது நம்மண்ணில்லடி
பேதையை தேடுவாய்யாடி...!
மீண்டும் பார்ப்போமா...?
பள்ளிதோழியாய் சந்திப்போமா...?
கேள்வியில் நிற்கிறேன்
வாராய் என்தோழியே....

Comments
Post a Comment