கண்மணியே...(கண் வைத்து கவிபாடல்)
விழிபாத்தியில் கண்ணே
விதைத்து விடு என்னை...
வேல்விழியில் நீ
வீழ்த்தினாய் என்னை...
கயல்விழியில் காந்தம்
இழுக்கிறாய் என்னை...
கண்களை மூடினால்
கருவிழி நீ மறைவாய்யே...
கெண்டமீன் கண்களடி நீ
வலைக்கண் வீசுகிறேன் நான்...
தூண்டிலில் கண்ணே நீ மாட்டுவாய்யா...
துள்ளி காத்திடுவேன் கண்மணி உன்னை...
மனக்கண் திறந்தாலும்
மதிஅழகி நீ அங்கிருப்பாய்...
ஆதிசுந்தரி கண் அசைத்தாலும்
அன்பே உன்னை நான் மறவேன்...

அருமையான பதிவு...
ReplyDelete🙏
ReplyDelete