மீனவ குடில்
மீனவ குடில்
இரவு வானில்
முழு மதி...
தொட்டுவிட
துடிக்கும்
கடல் அலை...
உலர்ந்து வரும்
கருவாடு வாடை
காற்றில் மிதக்க...
பரதவர் யாவரும்
துன்பம் இல்லா
துயில் நிலை...
கடல் உள்ளிருக்கும்
சங்கு ஒலிக்க...
தென்னங்கீற்று
உரசல் ஒலிஎழுப்ப...
அலைகள்
ஆடல் பாடல்
நடனம் புரிய...
தன் மக்கள்
துயிலுக்கு
ஸ்ருதி சேர்க்கும்
கடல் மாதா...!
🌴🌊🌊🌊🌊🌊🌊🌴

அருமையான கவிதை.....
ReplyDeleteஅருமை சகோ
ReplyDelete